
பிரியமானவர்களே
புனித அந்தோனியார் ஆலயம்
குருசடி பங்கு
எனது வாழ்நாளின் பெரும்பாக்கியம்
உயிரோட்டமான பங்கு
வளமான மண்
இனிமையான மக்கள்
நீடித்த வரலாறு
திசை காட்டிய கைகள்
உடன்நடந்த கால்கள்
உதவிய உள்ளங்கள்
உண்மை சொன்ன உறவுகள்
சுவை தந்த நண்பர்கள்
யோசித்த மூளைகள்
செயல்பட்ட அமைப்புகள்
விளைந்த கனிகள்
நிழல் தந்த மரங்கள்
பாடம் தந்த துயரங்கள்
பலம் தந்த சவால்கள்
செதுக்கிய சிற்பிகள்
பயிற்றுவித்த தோல்விகள்
தேடலின் உண்மைகள்
நீடித்த நம்பிக்கைகள்
ஒளியான இறைமை
என்னை நான் கண்டெடுக்க (10 07 2021-19 05 2026)
உதவிய நொடிகளுக்கு நன்றி
இறைவனுக்கு நன்றி
அனைத்திற்கும் அனைவருக்கும்
கண்கள் பனிக்க , மனம் நினைக்க ...
வேண்டுவோம், அசைபோடுவோம்,
பயணிப்போம், சந்திப்போம்
மீண்டும் சந்திக்கும் வரை
குட்பை

|